தலைவலியை போக்க பாட்டி வைத்தியம்

🎟 தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும்.

🎟 தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்…

🎟 தலைவலிக்கு மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

🎟 தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள்.

🎈🎈வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும். கிராம்பை தூள் செய்து அதனை வெற்றிலை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🎈🎈பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

🎈🎈துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்

headache head pain headpain

Leave a Reply