கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் இயற்கை மருத்துவம்

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு கால்சிய சத்து குறைபாடு முக்கிய காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் கால்சிய சத்து குறைபாடு பிரச்சினையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

* தினமும் பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து கொள்ளலாம். சோயா பால் பருகி வருவதும் நல்லது. அதில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.

* பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும். பாலாக தயாரித்தும் ருசிக்கலாம்.

*காலை உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகி வருவதும் நல்லது. அதில் வைட்டமின் சி மட்டுமின்றி கால்சியமும் அதிக அளவில் நிறைந்திருக் கிறது. இது தினமும் உடலுக்கு தேவையான கால்சியத்தின் அளவை ஈடு செய்யும்.

* அத்தி பழத்தில் கால்சியம் மட்டுமின்றி பெண்களுக்கு தேவையான மற்றொரு ஊட்டச்சத்தான இரும்பு சத்தும் நிரம்பியிருக்கிறது. அத்தி பழங்களை சாலட்டுகளாகவும், உலர வைத்தும், சாப்பிடலாம். செரிமானம் சீராக நடைபெறவும் இது உதவும்.

* பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதனை அடிக் கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மீன் வகைகளையும் சாப்பிட்டு வர வேண்டும்.

* கேழ்வரகில் அரிசியை விட 30 மடங்கு கால்சியம் நிறைந்திருக் கிறது. ராகி மால்ட், கேழ்வரகு தோசை, ரொட்டி போன்றவை தயாரித்து சாப்பிட்டு வரலாம். அவை கால்சியத்தின் அளவை அதிகப் படுத்தும்.

* காராமணியில் கால்சியம் அதிகம் இருக்கிறது. சூப்பாகவோ, சாலட்டுகளில் சேர்த்தோ, வேகவைத்தோ சாப்பிட்டு வரலாம்.

calcium for bones
Calcium-rich foods

Leave a Reply