தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்

👏🏼பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.

👏🏼சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.

👏🏼கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.

👏🏼கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

👏🏼ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

👏🏼இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

👏🏼அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

👏🏼தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

👏🏼வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.

👏🏼ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

👏🏼குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

clapping

Clap your hands for 20 minutes daily

Leave a Reply