மூட்டு வலி நீங்க

மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது… இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது.. எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள்…

ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன..

முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை  சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.

மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.  வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

குப்பைமேனி

குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு  எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி,  முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து  அருந்தலாம்.

சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

பூண்டு

பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

இஞ்சி

250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய் கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும்.

கொய்யா

இலை கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.

பாலில்

சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்க மூட்டுவ‌லி க‌ட்டுப்ப‌டும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி குறையும்.

knee pain joint pain Arthritis  Get rid of joint pain