வல்லாரைக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஞாபக சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவும் கீரையாக திகழ்கிறது வல்லாரைக்கீரை. இதற்கு இணையாக உலகிலேயே வேறெதுவும் கிடையாது என்று கூறலாம். வல்லாரைக்கீரை பொதுவாக ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளரும்.

வல்லாரைக்கீரையை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது, அதில் புளியை சேர்க்க வேண்டாம். ஏனெனில் புளி வல்லாரைக் கீரையின் சக்தியைக் கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேப் போல, உப்பையும் பாதி அளவு சேர்த்து சமைத்தால் போதுமானது.

மாரடைப்பு :-

வல்லாரைக் கீரையை சீரான முறையில் உங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறையும். இது இதயத்திற்கு வலு சேர்க்கும் உணவாகும்.

குழந்தைகளுக்கு :-

வல்லாரைக் கீரையை நெய் ஊற்றி வதக்கி சிறிதளவு இஞ்சி, ஓரிரு பூண்டு விழுதுகள் சேர்த்து துவையல் போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியப் பிரிச்சனைகள் எல்லாம் சரியாகும்.

பற்கள் வெண்மையாக :-

பலருக்கும் பற்களில் மஞ்சள் நிறம் படிந்திருக்கும். இதனால் வாய்விட்டு சிரிக்கக் கூட தயங்குவர். அந்த மஞ்சளைப் போக்க வல்லாரைக் கீரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெண்மையாக பளிச்சிடும்.

ஆயுளை நீட்டிக்கும்:-

சீரான முறையில் நீங்கள் வல்லாரைக் கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் ஆயுள் நீட்டிக்கும். ஏனெனில், வல்லாரையில் இரத்தத்தை சுத்தம் செய்யும் திறன் அதிகமாக இருக்கின்றது

மூளை பலப்படும் :-

நினைவாற்றல் மட்டுமின்றி, மூளையின் செயல்திறன், வலிமை அதிகரிக்கவும் வல்லாரைக் கீரை நல்ல முறையில் உதவுகிறது.

கை, கால் வலிப்பு குணமாகும்:-

கை, கால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு வல்லாரைக் கீரை ஒரு வரப்ரசாதம் என்றே கூறலாம். ஏனெனில், இது வலிப்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் :-

உங்களது உணவுப் பழக்கத்தில் வல்லாரைக் கீரையை சேர்த்துக் கொள்வதால், காய்ச்சல், மாதவிடாய் கோளாறு, மாலைக் கண் போன்ற பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுக் காணலாம்.

முகப்பொலிவு :-

முகத்தில் சுருக்கம், வறட்சி உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை சாப்பிடலாம். ஏனெனில், வல்லாரையில் இருக்கும் சத்துகள் உங்கள் முக சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து பொலிவுற உதவும்.

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும். கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும்.

centella asiatica vallarai

Health benefits of eating spinach

Leave a Reply