ஆப்பிள் விதையின் தீமைகள்

நாம் வாங்கும் பழங்களில் முதலிடம் வகிப்பவை ஆப்பிள். தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

🍎 ஆப்பிள் பழத்தில் நீர்ஸ்ரீ 85மூ புரதம்ஸ்ரீ 0.3மூ, கொழுப்புஸ்ரீ 0.1மூ, மாவுப்பொருள்ஸ்ரீ10மூ, தாது உப்புக்கள்ஸ்ரீ 0.4மூ, கால்சியம்ஸ்ரீ 0.01மூ, இரும்புஸ்ரீ1.7மூ, வைட்டமின் டீஸ்ரீ40 யு னிட்டுகள் மற்றும் பாஸ்பரஸ்ஸ்ரீ0.02மூ உள்ளது.

🍎 ஆப்பிள் பழத்தில் இவ்வளவு சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இதன் விதைகளில் விஷத்தன்மை இருக்கிறது. ஆப்பிள் விதைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இங்கு காண்போம்.

🍎 ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.

🍎 ஆப்பிளைச் சாப்பிடும்போது, ஆப்பிள் விதைகளையும் சேர்த்து உண்டால் விதைகளில் உள்ள அமிக்டாலின் செரிமான மண்டலத்தை சென்றடைந்து, சயனைடை நச்சாக மாற்றி, உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

🍎 மேலும் இந்த(சயனைடு) நச்சுப்பொருள், உடலில் செல்லும் ஆக்ஸிஜனை தடைசெய்து, பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.

🍎 ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றாற் போல ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு வேறுபடும். குறிப்பாக 0.3-0.35 மிகி வரையிலான சயனைடு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.

🍎 ஒரு கப் அளவு ஆப்பிள் விதைகளை உணவாக எடுத்துக் கொண்டால் மூளை, இதயம் போன்றவற்றைப் பாதித்து, கோமா நிலை மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.

🍎 ஆப்பிள் விதைகளை அதிகமாகச் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு அதிகமாவது, இரத்த அழுத்தக் குறைவு, சுவாசக்கோளாறு மற்றும் மூச்சுச்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

🍎 சிலர், நான் குறைந்த அளவு தான் ஆப்பிள் விதைகளைச் சாப்பிடுகிறேன் என்பார்கள். ஆனால் குறைந்த அளவு சாப்பிட்டாலும் வயிற்றுவலி, மயக்கம், வாந்தி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற பாதிப்பபுகள் உண்டாகும்.

🍎 எனவே நீங்கள் ஆப்பிளைச் சாப்பிடும் போது விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுங்கள்.

🍎 மேலும், உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது விதைகளை நீக்கி விட்டு சாப்பிடக் கொடுங்கள்.

Tags: apple seed poison apple seed

Leave a Reply