ராகி கேழ்வரகு

அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான். அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?

ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை… இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும்.

இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது,

சரி சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது…

உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.

”கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு.

இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக் கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது”.

அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு.

ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.

குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும்.

ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள – மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு – இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

”மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது” என்றார்கள் அந்த அமைப்பினர்.

சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?

இந்த கேழ்வரகு என்ற ராகியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.

அரிசியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது.

மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன.

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும்.

இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன.

இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது.

இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

உடலுக்கு வலிமை தரும்
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவாக எடுக்கும்.

உஷ்ணத்தை குறைக்கும்

ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது.

இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது .
.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .உடல் சூட்டை தனிக்கும் .

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .

இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .கூழாக குடிக்கும் போது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும்.

கொலஸ்டிராலை குறைக்கும் .இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .

பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர்.

கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும் .

நிலங்களிலும் ,வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது .உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது .கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன.

இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.

இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.இயற்கையாய் இயற்கையோடு வாழ..!

இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..
ரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு.

கோதுமைக்கு இணையான சத்துக்கள் கொண்ட ராகியில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர்.

கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக்களை கொடுக்கிறது.

வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு.

இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு.

கேழ்வரகு கதிரில் உள்ள இலை தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.

குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வரகு பால் கஞ்சி:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு (முளைக்கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால்.

முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுக்கவும். அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும்.
கெட்ட கொழுப்புகளை வெளித்தள்ளி, நல்ல கொழுப்புகளை உடலில் சேர்க்கிறது.

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்.

கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடாமல் பொடித்து கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும்.

இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது.

Ragi Kezhvaragu

Finger millet ragi
Anemia

Leave a Reply