குளிர் காலத்தில் சருமத்தை பொலிவுடன் வைக்கும் 10 சூப்பர் உணவுகள்!

வறண்ட குளிர் காற்று, மிக குறைவான தட்பவெப்ப நிலை, குறைந்த ஈரப்பதம் மற்றும் வீட்டிற்குள் சூட்டை வரவழைக்க வழிவகைகள் – இவையாவும் போதாதா? எதற்கு என்று கேட்கிறீர்களா? உங்கள் சருமம், உதடு மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு தொந்தரவுகளை உண்டாக்க! குளிர் காலத்தில் சுகம் கிடைத்தாலும் அதே அளவிலான தொந்தரவுகளும் உண்டாகும். அது நிலவுகிற குளிரை பொறுத்து அமையும். அதிக குளிர் என்றால் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கும்.

இந்த பாதிப்புகளால் உங்கள் சருமம் வறண்டு போகும், பொடுகு தொல்லை உண்டாகும், சரும நிறம் மங்கி விடும், உதடுகள் வெடிப்புக்குள்ளாகும், அரிப்பு ஏற்பாடு மற்றும் சரும எரிச்சல் உண்டாகும். இவைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் சரும பராமரிப்பில் சீரான முறையில் ஈடுபடுவது மட்டும் பத்தாது. மாறாக நீங்கள் உண்ணும் உணவிலும் கூட கவனம் தேவை. அப்படி கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியமான பொழிவுடன் கூடிய சருமத்தை குளிர் காலத்திலேயும் கூட பெறலாம்.

உங்கள் உணவு பழக்கம் உங்கள் சருமத்தை வறட்சி மற்றும் புறஊதா கதிர்களில் இருந்து காக்கும். அது மட்டுமல்லாது சுருக்கங்களை குறைத்து, வயதாகும் சில அறிகுறிகளை குறைத்து, வழுவழுப்பான மற்றும் மின்னிடும் சருமத்தை மேம்படுத்தும். உங்கள் சருமத்தை குளிர் காலத்தில் கூட ஆரோக்கியத்துடனும், அழகுடனும், பொலிவுடனும் வைத்திருக்க உதவும் சில உணவுகள் உள்ளது. அப்படிப்பட்ட சில உணவுகளைப் பற்றி தான் நாம் பார்க்கபோகிறோம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு நல்லதாகும்; குறிப்பாக குளிர் காலத்தில் உங்கள் சருமம் வறண்டு போகும் போது. இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ மற்றும் பல்வேறு இதர கனிமங்களும், இயற்கையான கொழுப்பமிலங்களும் வளமையாக உள்ளது. அதனால் சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து, அதன் நெகிழ்வு தன்மை மற்றும் மேன்மைத் தன்மையை பராமரித்திடும். சருமம் வயதாவதையும், தோற்றத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுத்து, இயக்க உறுப்புகளில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் செய்யும். குளிப்பதற்கு முன்பு, வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை முகம், கைகளின் பின்புறம், தோள்பட்டை மற்றும் முட்டிகளில் நன்றாக தடவிக் கொள்ளவும். சிறிது நேரத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். பின் சருமத்தை காய வைத்து பின்பு, மீதமுள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். உங்கள் சருமம் வியக்க வைக்கும் வகையில் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் மாறும். மேலும், எக்ஸ்ட்ரா-வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சாலட் அலங்காரத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்துங்கள்.

பப்ளிமாஸ்

பப்ளிமாஸில் வைட்டமின் சி உள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் உங்கள் சருமத்தை இயக்க உறுப்புகளில் இருந்து ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். மேலும் இதில் லைசோபீன் உள்ளதால், உங்கள் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும். இதிலுள்ள பொட்டாசியம் சுருக்கங்களையும், வயதான தோற்றத்தையும் தடுக்கும். மேலும் தீமையான புறஊதா கதிர்களில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும். பப்ளிமாஸில் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் சருமத்தை திடமாகவும், மென்மையாகவும் மாற்றும். கூடுதலாக இதிலுள்ள நரின்ஜின் என்ற தனித்துவமான ஃபைட்டோகெமிக்களால் ஈரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். இதனால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். நற்பதமான பப்ளிமாஸ் ஜூசை குளிர் காலத்தின் போது சீரான முறையில் பருகிடவும் அல்லது பப்ளிமாஸை கொண்டு ஃபேஸ் பேக் செய்து அதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். அதற்கு ½ பப்ளிமாஸ் ஜூசை 1 டீஸ்பூன் தேன் மற்றும் ½ கப் ஓட்ஸ் பொடியுடன் கலந்திடவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவுங்கள். காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் வழுவழுப்பான அமைமுறையையும், இயற்கையான பொழிவையும் சருமத்திற்கு அளித்திடும்.

வெண்ணெய்ப்பழம்/அவகேடோ

குளிர் காலத்தின் வறட்சியான சருமத்தை இதமாக்க வெண்ணெய்ப்பழத்தை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் வளமையாக உள்ளது. அதனால் உங்கள் சருமத்திற்கு போதிய ஈரப்பதம் கிடைக்கும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையானதாகும். கூடுதலாக, சுருக்கங்களை குறைத்து உங்கள் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்கும். வெண்ணெய்ப்பழத்தை உண்ணுவதோடு, அதனை கொண்டு நீர்ச்சத்து நிறைந்த ஃபேஸ் மாஸ்க்கை தயார் செய்யலாம். பழுத்த வெண்ணெய்ப்பழத்தில் சதையை அப்படியே எடுத்து அதனை நன்றாக மசித்திடவும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். இந்த வழுவழுப்பான பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது தடவவும். அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் சில முறை பயன்படுத்துங்கள். பொலிவிழந்த, ஈரப்பதமற்ற, அரிப்பை ஏற்படுத்துகிற குளிர் கால சருமத்திற்கு வெண்ணெய்ப்பழம் எண்ணெய் அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இந்த எண்ணெய்யை குளிக்க போகும் முன்பு உடலில் தடவிக் கொள்ளவும்.

கேரட்

கேரட்களில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், அது உங்கள் சருமத்தை குளிர் காலத்திலும் கூட ஆரோக்கியமாகவும், பொழிவுடனும் வைத்திட உதவும். சுருக்கங்கள், நிறமூட்டல், சீரற்ற சரும நிறம் போன்ற வயதாகும் அறிகுறிகளை தடுக்கும். கூடுதலாக, கேரட்களில் பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபீன் போன்ற காரோட்டீனாய்டுகள் உள்ளதால், புறஊதா கதிர்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். பொட்டாசியம் வளமையாக உள்ளதால், வறண்ட சரும பிரச்சனையையும் போக்கும். தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் நீர்ச்சத்துடன் இருக்கும். கேரட்களை கொண்டு மாய்ஸ்சுரைசிங் ஃபேஸ் மாஸ்க்குகளை தயார் செய்யலாம். மசித்த கேரட் 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பால் க்ரீம் 1 டீஸ்பூன், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்திடவும். அதனை சுத்தமான முகத்தில் தடவுங்கள். 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை அலசுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் சில முறை பயன்படுத்துங்கள். இதனால் மென்மையான, பளிச்சிடும், ஈர்பதத்துடனான சருமத்தை பெறுவீர்கள்.

ப்ராக்கோலி

உங்கள் சருமத்திற்கு மற்றொரு ஆரோக்கியமான காய்கறியாக விளங்குகிறது பச்சை பூக்கோசு. சருமத்தை மேம்படுத்த இதவும் வைட்டமின் ஏ மற்றும் சி, மற்றும் இயற்கையான ஈஸ்ட்ரோஜென்களை கொண்டுள்ள இது, உங்கள் சருமத்திற்கு மாயங்களை செய்திடும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திட கொலாஜென் உற்பத்தியை ஊக்கவிக்கும் வைட்டமின் சி. அதே சமயம் சூரிய ஒளியால் சருமம் பாதிப்படைவதை தடுக்கவும், சரும அணுக்களின் சவ்வுகளை பாதுகாக்கவும் வைட்டமின் ஏ உதவுகிறது. கூடுதலாக, ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் பி, குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட, வெண்ணிற படைகளை கொண்ட சரும பிரச்சனைகளை நீக்க உதவும். ப்ராக்கோலியை சீரான முறையில் உட்கொண்டால் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும். அவித்த அல்லது வறுத்த ப்ராக்கோலியை உட்கொண்டால், அதிக பயன்களை பெறலாம்.

பாதாம்

சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்களை பாதாம் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்திற்கு மாயங்களை செய்திடும்; குறிப்பாக வறண்ட குளிர் காலத்தின் போது. இதில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளதால், உங்கள் சருமம் புத்துணர்வு பெறவும், சூரிய ஒளியால் உண்டாகும் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவும். இந்த நட்ஸ்களில் வயதாவதை தடுக்கும் குணங்களும் உள்ளன. அதனால் சுருக்கங்களையும், வயதாகும் பிற அறிகுறிகளையும் குறைக்க உதவும். குளிப்பதற்கு முன்பு, உங்கள் உடலை பாதாம் எண்ணெய் அல்லது பாதாம் பாலை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் குறிப்பிடத்தக்க பொலிவுடன் பளபளக்கும் சருமத்தை பெறுவீர்கள். பாதாமை வீட்டில் பயன்படுத்தும் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். கைநிறைய பாதாம்களை எடுத்து முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கி, அதனை அரைக்கவும். அதனுடன் கொஞ்சம் பால் அல்லது தயிரை சேர்த்து, ஒரு பேஸ்ட் வடிவத்தில் அதை மாற்றிடுங்கள். இத்தனை முகத்திற்கு பயன்படுத்தும் ஸ்க்ரப்பாக வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்துங்கள்.

கீரை

ஆரோக்கியமான சருமம் என வந்து விட்டால், உங்களால் சீரை அளிக்கும் பயன்களை தவிர்க்க முடியாது. ஆரோக்கியமான சரும அணுக்களை பெறுவதற்கும், சருமத்தின் இயற்கையான வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடவும் இந்த பச்சை காய்கறியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பயன்படுகிறது. கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் சரும நிறத்தையும் மேம்படுத்தும். மற்றொரு ஆன்டி-ஆக்சிடன்டான வைட்டமின் சி, சரும அணுக்களை சீர் செய்யவும் சருமத்தை அழகாக காட்டவும் உதவும். கீரையில் இரும்புச்சத்தும் வளமையாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் உங்கள் சருமம் பொழிவிழந்து காணப்படும். கீரையில் உள்ள லுடீன் சூரிய பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் உதவும். வறண்ட மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் சருமத்தை தடுக்க ½ கிளாஸ் கீரையுடன் கொஞ்சம் எலுமிச்சை ஜூசை கலந்து குடிக்கவும். கீரையை சூப், சாலட் போன்ற பிற உணவுகளிலும் பயன்படுத்தலாம்.

கிரீன் டீ

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ள கிரீன் டீ இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். இது வறட்சியை தடுத்து, சரும நிறத்தையும் மேம்படுத்தும். கூடுதலாக, கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் சுருக்கங்கள், கருவளையங்கள், தொய்வான சருமம் போன்ற வயதாகும் அறிகுறிகளை தடுத்து, குறைக்கவும் செய்யும். குளிர்ந்த கிரீன் டீயை முகத்தில் தெளித்து, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் போதும். மென்மையான தோலை நீக்கும் மாஸ்க்கை வீட்டிலேயே தயார் செய்ய வேண்டுமானால், பயன்படுத்திய கிரீன் டீ பைகளுடன் கொஞ்சம் தேனையும் சேர்த்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இதனை சுத்தமான முகத்தில் தடவி, ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் தண்ணீரில் அலசுங்கள். இதனை வாரம் இரு முறை செய்யுங்கள். கடைசியாக, தினமும் 2-3 கப் கிரீன் டீ குடிக்க மறந்து விடாதீர்கள்.

சால்மன்

குளிர் காலத்தில் அழகிய பிரகாசமான சருமத்தை பெற வேண்டுமானால், உங்கள் உணவில் சால்மன் மீனை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகளவில் உள்ளது. அதனால் குளிர் காலத்தின் வறட்சியான காற்று மற்றும் வீட்டிற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சூட்டின் மத்தியில், உங்கள் சருமம் கொழுத்து, ஈர்பதத்துடன் காணப்படும். கூடுதலாக, இதில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இது தீமையான புறஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை காக்கும். மேலும், சால்மன் மீனில் உள்ள ஜிங்க் புதிய சரும அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும். சால்மன் மீனை வாரத்திற்கு 2 வேளை சாப்பிடுங்கள். பொரித்த சல்மான் மீன்களுக்கு பதிலாக, கிரில் செய்யப்பட்ட அல்லது வாட்டிய சால்மன் மீனை உட்கொண்டால், மென்மையான, தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தைப் பெறலாம்.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட், குறிப்பாக 70% கொக்கோ அடங்கியுள்ளவைகள், நம் சருமத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. இதில் ஃப்ளேவோனால்கள் வளமையாக உள்ளது. அதனால் கடுமையான குளிர் காலத்திலும் கூட உங்கள் சருமத்தின் தோற்றம் நன்றாக இருக்கும். ஃப்ளேவோனால்கள் என்பது ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஆகும். இது உங்கள் சருமத்தை புறஊதா கதிர்கள் மற்றும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். வாரத்திற்கு 2-3 அவுன்ஸ் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் பொழிவுடன் கூடிய அழகிய சருமத்தை பெறுவீர்கள். பொழிவிழந்து காணப்படும் உங்கள் சருமத்தை பிரகாசமடையச் செய்ய, டார்க் சாக்லெட் மாஸ்க்கையும் பயன்படுத்தலாம். டார்க் சாக்லெட் பார் ஒன்று உருக்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் பருப்பு மாவு, 1 டீஸ்பூன் பால் க்ரீம் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்திடவும். இதனை முகம் முழுவதும் பூசிக் கொள்ளுங்கள். அதை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.

super foods skin glow winter foods super foods to keep your skin glowing during winter